கடந்த காலங்களில் நமது நாட்டில் பிரதான தொழிலாக இருந்து வந்தது உழவும், நெசவும் தான்.
ஆனால், நாகரீகம் வளர வளரவும், இந்த இரண்டு தொழில்களிலும் லாபம் குறைவு என்பதாலும், புதிய தொழில்களில் அதிக லாபம் கிடைப்பதாலும், இளையதலைமுறையினர் பலரும் தங்களது பாரம்பரிய தொழிலை விட்டுவிட்டு, நகரங்களை நோக்கி படையெடுத்து புதிய தொழில்களில் கோலோச்சி வருகின்றனர்.
உலகமயமாக்கல் மூலம் ஒற்றைப் பண்பாடு புகுந்துவிட்டதாவும், அதனால், அனைத்து இனங்களும் தங்களது அடையாளங்களை இழந்து வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
இந்த நிலையில்தான், பொங்கல் பண்டிகை நாடு முழவதும் இந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடும் நாள், நேரம் ஒவ்வொரு வருடமும் மாறுபடும். ஆனால், தமிழகத்தில் தை 1-ம் தேதி பிறந்துவிட்டால், அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்பது உறுதி செய்யப்படுகிறது. இது வாழையடி வாழையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகையின் போதுதான், தங்களது மதிப்புமிக்க உறவினர்களை வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பது, ஆற்றங்கரை, குளக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று கொண்டாடுவது, கிராமிய விளையாட்டுகளை விளையாடி கொண்டாடுவது உள்ளிட்டவை பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
எனவே, நமது வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, உறவுகள் போன்றவற்றைக் காப்பாற்றவும், இளைய தலைமைுறைகளுக்கு வழி காட்டவும் பொங்கல் போன்ற பண்டிகைகள் தேவைப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் இழந்த அடையாளங்களை மீட்கும் ஒரு நவீன ஆயுதமாக பொங்கல் பண்டிகை அவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது.