கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு மாரத்தான் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்பட உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 26 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இந்தப் போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதிற்கு கீழ் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனம் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களுக்கும் செலகிறது.
இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 5 கி.மீ. ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் 9ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.