அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்!
Sep 17, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 7, 2024, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அப்போது, ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், போலீஸ் அதிகாரிகளும் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.

கடந்த மாதம் 21-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகப்புப் படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டனர். இத்தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 2-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீஸார் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வரும் 9-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

அப்போது, எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்கிறார். மேலும், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Tags: Amit Shahjammu kashmirJanuary 9th
Share
Tweet
SendShare
Previous Post

கேலோ இந்தியா :  விழிப்புணர்வு மாரத்தான் !

Next Post

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்!

Related News

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies