தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா களைகட்டும். இந்தாண்டு பொங்கல் விழா ஜன.14 -ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையின் தாராக மந்திரம். போகி பண்டிகை, தமிழகம், ஆந்திராவில் போகி மற்றும் பஞ்சாபில் லோஹ்ரி மற்றும் அஸ்ஸாமில் மாக் பிஹு மற்றும் போகாலி பிஹு என்றும் அழைக்கப்படுகிறது.
தை பொங்கலுக்கு முந்தைய நாளில் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது, தமிழ் மாதமான ‘மார்கழி’ மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை என்பது, பொங்கல் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.
இதேபோல, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் மகரச் சங்ராந்தி விழாவின் முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை என்றால், வீட்டில் உள்ள பழைய பொருட்களை வெளியே எடுத்து தீயிட்டுக் கொழுத்துவது தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்திரனுக்கு வழிபாடு நடத்தும் பண்டிகையாக போகி போற்றப்படுகிறது. காரணம், மழை தெய்வமே இந்திரன்தான். அதனால்தான் போகி போற்றப்படுகிறது.
போகியின் போது, ஆண்டு முழுவதும் உடுத்திய பழைய உடைகள், கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் உள்ளிட்டவை எல்லாம் தீயிட்டு அழிப்பது வழக்கமாகும்.
போகி பண்டிகை அன்று பொது மக்கள் அதிகாலையிலேயே வீடுகளை சுத்தம் செய்தும், தங்களது வீடுகள் முன்பு அரிசி மாவால் அழகிய ரங்கோலி கோலம் வரைந்து அலங்கரிப்பது வழக்கம். அப்படியே, செம்மண் பூச்சு போட்டு அழகு படுத்துவார்கள்.
வீட்டில் நல்ல ஆற்றல் குடிகொள்ள வாசமிகு மலர்களும், இலைகளையும் வீட்டில் சுவாமி படம் முன்பு வைத்து வழிபடுவது பழக்கம். இந்த நன்நாளில், சாதம், சாம்பார், ரசம், தயிர், பச்சடி, பருப்பு, கூட்டு, பொரியல், வருவல், அப்பளம், வடை, பாயசம் போன்ற சுவையான உணவுகளை தயார் செய்து குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் சுடச்சுட வாழை இலையில் பரிமாறி, இந்திரனுக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவித்து வழிபாடு நடத்துவார்கள்.
போகி பண்டிகையில் சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி நவிழும் விதமாக பொது மக்கள் வழிபடுவதால் பொங்கல் பண்டிகையில் போகி முக்கிய பண்டிகையாக இடம் பெறுகிறது.