ஜல்லிக்கட்டை திமுக மற்றும் காங்கிரஸ் தடை செய்தது. ஆனால் பிரதமர் மோடி ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தார்.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, தைத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையைில் இந்த ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமாக பிரதமர் மோடி இருந்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுக அங்கம் வகித்த அமைச்சரவையில்தான் ஜல்லிக்கட்டைத் தடை செய்தார்கள்.
கடந்த ஜூலை 11, 2011 அன்று, காங்கிரஸ், திமுக கூட்டணி அரசின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டு மே மாதம், உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு மீதான தடையை உறுதி செய்தபோது, ஜெயராம் ரமேஷ் அந்தத் தீர்ப்பை வரவேற்று, “காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது” என்று கூறினார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முன்னாள் பிரதமரும், அப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களைக் கைவிடுவது நன்று என்று மனிதநேய சங்கம் ஒன்றின் கடிதத்திற்குப் பதிலளித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் மோடி, தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் மத்திய அரசு உத்தரவுக்குத் தடை விதித்ததும், நிதி அமைச்சர் நிர்மா சீதாராமன், ஒரு அவசர சட்டத்தை இயற்றுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.
2016 ஆம் ஆண்டு மே மாதம், தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு முழுவதுமாக தடை செய்யப்படும் என்று கூறியிருந்தது.
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது காங்கிரஸ் கட்சிக்கு இருந்த வெறுப்பு அத்தகையது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்று திமுகவுடன் இணைந்து மக்களை மடைமாற்றி வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் அம்சங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ஆம் தேதி அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தருணத்தில், ஜல்லிக்கட்டுக்குத் தடை கோரி மனுத் தாக்கல் செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌமியா ரெட்டியும் ஒருவர் என்பதையும், சௌமியா ரெட்டிக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்தது நினைவு கூறத்தக்கது.
ஜல்லிக்கட்டின் அனுமதிக்காக, தொடக்கம் முதல் பிரதமர் மட்டும் தான் குரல் கொடுத்தார். மேலும் சட்டப்போராட்டத்திலும் அவரின் பங்கு மிகையாகது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த ஜனவரி 6 ஆம் தே கோலகாலமாக நடைபெற்றது. 746 காளைகள், 297 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டி 10 சுற்றுகளாக நடைபெற்றது.
திமுக, காங்கிரஸ் கட்சியாலும் அதன் கூட்டணிக் கட்சிகளாலும் இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.