மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! - பியூஷ் கோயல்
Mar 15, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரை, அண்ணாநகர் மற்றும் நொளம்பூரில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் இன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசியர்,

மோடியின் உத்தரவாத வாகனம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளையும் தாண்டி அரசுத் திட்டப் பலன்களை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தப் பயணம் மக்கள் பங்கேற்புடன் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக அவர்  கூறினார்.

50 நாட்களில் 10 கோடிப்  பேரை சென்றடைந்துள்ளது  என்று கூறிய அவர், அரசு திட்டங்கள் குறித்து மக்களிடையே இந்தப் பயணம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.  திட்டங்களின் பயன்கள் தகுதியான நபர்களின் வீடுகளுக்கே சென்றடைவதாக அவர் தெரிவித்தார். இந்தப் பயணம்  புதிய இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவை நோக்கியது என்று தெரிவித்தார்.

பிரதமர்  நரேந்திர மோடியின் செயல்பாடுகள் 140 கோடி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும்  81 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் பத்து கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏழைகள் நல உணவுத் திட்டத்தில் 3.5 கோடி பேர் பயனடைவதாகவும், இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும்  கூறினார்.

தேசத்தின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியமானது என,  கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பிரதமர் பேசியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நல்லாட்சிக்கான செங்கோல் அமிர்த காலத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகிய 4 தரப்பினரின் முன்னேற்றத்தில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டின் மகளிர் சக்தியை கண்டு தாம் வியப்படைவதாக அவர் குறிப்பிட்டார்.  மாநிலத்தில் மகளிர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டுக்கு முன்பு  வங்கிக் கடன்கள் சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். தற்போது, அந்த நிலை மாறியுள்ளதாகவும், சாதாரண மக்கள் எளிதில் கடன் பெற முடிவதாக தெரிவித்தார்.

அவர்கள் உரிய முறையில் கடன்களை திருப்பிச் செலுத்துவதால் லாபத்தில் இயங்குவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி திகழ்கிறது என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் நலனில் அதிக அக்கறைக் கொண்டுள்ளதாகக் கூறியவர், மாநில மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது முத்ரா வங்கிக் கடன் திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பயன்களை பயனாளிகளுக்கு குறிப்பாக பெண் பயனாளிகளுக்கு அதிக அளவில் மத்தியஅமைச்சர் வழங்கினார்.

Tags: central government
ShareTweetSendShare
Previous Post

பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!

Next Post

உலக முதலீட்டாளர் மாநாடு : குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies