பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!
Sep 13, 2026, 02:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது : பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 08:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளுடன் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயண பயனாளிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சத்தீஸ்கரின் காங்கேரைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த  பூமிகா பூராயா, பிரதமருடன் உரையாடியபோது, தனது கிராமத்தில் உள்ள 29 வன வருவாய் திட்டக் குழுக்களில் ஒன்றில் செயலாளராக பணியாற்றுவதாகவும், வனத்திலிருந்து செல்வம் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், நீர்வளத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, குடும்ப அட்டை, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம்  உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் நன்மைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பூமிகா அனைத்து அரசுத் திட்டங்களின் பெயர்களையும் நினைவில் வைத்திருப்பதை அடுத்து பிரதமரின் கவனத்தை பெற்றார்.

மக்களுக்காக பணியாற்ற இது அரசு நடவடிக்கைகளை அதிக அளவில் வலுப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி கூறினார். சரியான நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பது குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பூமிகாவிடம் அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், அவரது குடும்பம் மற்றும் பெற்றோர் குறித்து கேட்டறிந்தார். தற்போது கல்லூரியில் படிக்கும் தனது தம்பி உட்பட இரு குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதில் அவரது பெற்றோரின் பங்களிப்பை பாராட்டிய மோடி, குழந்தைகளின் கல்வியில் கிராமத்தின் மற்ற குடியிருப்பாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மஹ்வா லட்டு மற்றும் நெல்லிக்காய் ஊறுகாய்களை உற்பத்தி செய்யும் தனது சுய உதவி வன வருவாய் திட்ட குழுமம் குறித்தும் அவர் பிரதமரிடம் தெரிவித்தார், அவை ஒரு கிலோ
ரூ.700-க்கு விற்கப்படுவதாக கூறினார்.

அனைத்து நன்மைகளும் பயனாளிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்துள்ளதாக திருப்தி தெரிவித்த பிரதமர் மோடி, போதைக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் மஹ்வாவை சரியான முறையில் பயன்படுத்துவதில் அவரது முயற்சிகளையும் பாராட்டினார். “பழங்குடிப் பகுதிகளில் வாழும் குடிமக்களின் மேம்பாட்டிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது” என்று கூறிய பிரதமர், வன வருவாய் திட்ட குழுவினர் உருவாக்கிய நேர்மறையான முடிவுகளுக்கு பூமிகாவை பாராட்டினார்.

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட அதிகம் பாதிக்கப்படக் கூடிய பழங்குடியின மக்களுக்கான திட்டம் பற்றி அவர் தெரிவித்தார், இது பழங்குடி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

ரசாயனம் இல்லாத பொருட்களுக்கான சந்தை 7 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

Next Post

மகளிருக்கு அதிகாரமளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளிக்கிறது! – பியூஷ் கோயல்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies