பாரதப் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் இந்தியாவில் யாரும் இல்லை என தமிழக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், அதில், அவர் பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். அதில் ஒன்றுதான், பாரதப் பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் யாரும் இந்தியாவிலேயே இல்லை என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். அவரது இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, கார்த்தி சிதம்பரம் எம்பியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, காங்கிரஸ் தலைமை சந்தேகம் எழுப்பியது. ஆனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்று கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.