அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4இல் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.
விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து மாநில தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இரு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதி பட்டியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு டெல்லி புறப்பட்டு சென்றார்.