புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் - ராம்நாத் கோவிந்த்
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் – ராம்நாத் கோவிந்த்

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 05:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போலியான மற்றும் தவறான செய்திகள் முழு உலகிற்கும் மிகப்  பெரிய சவாலாகும் என்றும் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில்  பட்டம் பெறும் மாணவர்கள் இதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.சி) 55-வது பட்டமளிப்பு விழா பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (10.01.2024) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பட்டமளிப்பு விழாவில் தில்லி, ஐஸ்வால், அமராவதி, கோட்டயம், ஜம்மு ஆகிய இடங்களில் உள்ள ஐ.ஐ.எம்.சி நிறுவனத்தைச் சேர்ந்த  700-க்கும் அதிகமான மாணவர்கள் முதுகலைப் பட்டயம் பெற்றனர். இந்தி, ஆங்கிலம், ஒடியா, மராத்தி, மலையாளம் மற்றும் உருது இதழியல், விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டயங்களை இந்த மாணவர்கள் பெற்றனர்.

மேலும், 65 மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,

பட்டம் பெற்ற மாணவர்களிடம், ஐ.ஐ.எம்.சி போன்ற நிறுவனங்களில் பட்டம் பெறும் எதிர்கால பத்திரிகையாளர்கள், போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றார். இன்று, யார் வேண்டுமானாலும், வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்ப முடிவதாகவும், இன்றைய டிஜிட்டல் வழிமுறைகளை அவர்கள்  பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் முழு உலகிற்கும் சவாலாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த சவால்களுக்கு மத்தியில் மக்கள் துல்லியமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். வேகமாக முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கப் போதுமான அளவு செயலாற்ற வேண்டும் என்று பத்திரிகை மற்றும் ஊடகத் துறைக்கு வரும் மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும் என்று கூறினார்..

பத்திரிகைத்  துறையின் மதிப்புகளை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்றும், இந்த ஆற்றலை அவர்கள் திறன் வாய்ந்த முறையில் புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.ஐ.எம்.சி. தலைவர் திரு ஜெகநாதன், தலைமை இயக்குநர் டாக்டர் அனுபமா பட்நாகர், கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் நிமிஷ் ரஸ்தகி, நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: ramnad govind
Share
Tweet
SendShare
Previous Post

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய தோனி!

Next Post

நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை : டெல்லி சென்றார் சத்யபிரதா சாகு! 

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies