துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு, பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள சிறந்த தளம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று (10.01.2024) துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“இன்றைய துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் சில அம்சங்களைப் பகிர்கிறேன். இந்த மாநாடு பொருளாதார வளர்ச்சி, சீர்திருத்தங்கள் மற்றும் நமது வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்துவதற்கான முற்போக்குக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Some glimpses from today’s @VibrantGujarat Summit – a great forum to share perspectives on economic growth, reforms and strengthen our development journey. pic.twitter.com/DszSE2SQCd
— Narendra Modi (@narendramodi) January 10, 2024