பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! - பியூஷ் கோயல்
Sep 12, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! – பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புக்களுக்கான எதிர்கால திட்டமிடலுக்கான கருவியாக செயல்படுகிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் இன்று (10.01.2024) நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டின் போது ஏற்பாடு செய்யப்பட்ட “பிரதமரின் விரைவுசக்தி குறித்த நிகழ்வில்  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய பியூஷ் கோயல்,

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை என கூறியுள்ளார். முழுமையான வளர்ச்சி தொடர்பான முடிவுகளுக்கான தரவுகள்” என்ற கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அமைச்சர், பிரதமரின் விரைவுசக்தி, இந்தியா அல்லது ஆசியாவில் மட்டுமல்லாமல், உலகளவில் உள்கட்டமைப்புக்கான எதிர்கால திட்டமிடல் கருவியாக உள்ளது என்று கூறினார்.

திட்டங்கள் நீண்டகாலம் தாமதமடைதல் மற்றும் செலவு அதிகரிப்பு ஆகிய சவால்கள் முன்பு இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். பிரதமரின் விரைவுசக்தி தொடர்பாக பேசியவர், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பிரதமர் நரேந்திர மோடி பதவி வகித்த போது இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

குஜராத்தை முதலீட்டு மையமாக மாற்றியமைப்பதில் உள்கட்டமைப்பின் முக்கியப் பங்கை உணர்ந்த பிரதமர், வலுவான உள்கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கியதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிரதமரின் விரைவுசக்தி மூலம் சிறந்த திட்டமிடல், பகுப்பாய்வு, கண்காணிப்பு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏதுவான தரவுகள் ஒருங்கிணைப்பு ஆகியவை  உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.

உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதம் ஆனால் செலவுகள்  அதிகரிக்கும் என்றும் அது மக்களையும் பாதிக்கும் எனவும் கூறினார். மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதற்காகவும் விரைவான, திறன் வாய்ந்த மற்றும் செலவு குறைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பிரதமரின் விரைவுசக்தி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கில் சர்வதேச அமைப்புகள், தொழில்துறை வல்லுநர்கள், அரசுத் துறைகள் மற்றும் பிரதமரின் விரைவுசக்தி கட்டமைப்பு திட்டக் குழு போன்றவற்றின் பங்கேற்புடன் ஆக்கபூர்வமான உரையாடல்கள் இடம்  பெற்றன.

Tags: piyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு பொருளாதார வளர்ச்சி! – பிரதமர் மோடி

Next Post

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies