சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!
Sep 10, 2026, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: ஏற்க மறுத்த சபாநாயகர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 10, 2024, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்று சபாநாயகர் ராகுல் நர்வேகர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணி உடைந்தது.

இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவரது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஒருபுறம் பொருந்தாக் கூட்டணி, இன்னொருபுறம் மகனுக்கு அமைச்சர் பதவி என்பதால், இந்த விவகாரம் கட்சிக்குள் புயலைக் கிளப்பியது. மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டேவுக்கும், கட்சித் தலைமைக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்து வந்தது.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022-ம் ஆண்டு கட்சியில் இருந்து பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பா.ஜ.க., சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இதையடுத்து, கட்சித் தாவல் சட்டப்படி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதேசமயம், உத்தவ் தாக்கரே அணியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படி ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரிக்கை விடுத்தது. இதன் காரணமாக, சிவசேனா கட்சியின் மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

இதனிடையே, தகுதி நீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

எனவே, இது குறித்து இறுதி முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு எச்சரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கெடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே உட்பட 54 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை சபாநாயகர் ராகுல் நார்வேகர் இன்று அறிவித்தார்.

அதன்படி, “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.வான ஏக்நாத் ஷிண்டேயை சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை ஏற்கவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிதான் உண்மையான சிவசேனா” என்று தெரிவித்தார்.

சபாநாயகரின் இந்த அதிரடியால் உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

Tags: MaharastraUddhav ThackereyEknath Shindey
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் புரட்சிகரமான நடவடிக்கை! – பியூஷ் கோயல்

Next Post

உடல் தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies