தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மென்பொறியியல் துறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிற்றி வருகின்றனர்.
இவர்களில் பலர் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், தீபாவளி, பொங்கல், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
ஜனவரி 14 -ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு கார், வேன் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள், வழக்கமாக, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வது வழக்கம். இதனால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாம்பரம், பெருங்குளத்தூரில் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, அந்த சாலையை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில், திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று வழியாக சாலை வழியாகச் சென்றால், எளிதாக செல்ல முடியும்.
இதன் மூலம் பயண நேரம் குறையும், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் செலவும் குறையும், போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.