ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை இந்திய இராணுவ வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தேரா கி காலி அருகே உள்ள வனப்பகுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காட்டுத்தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு, தீயை மேலும் பரவாமல் தடுத்தனர்.
இதை அடுத்து, வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்பு படையினரின் இந்த துரித செயலால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
சிவில் அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுவில் உள்ள வனப்பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள வனப் பொருட்கள் எரிந்து நாசமானது.