108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சென்றார்.
அப்போது, அவருக்கு திருக்கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், அவருக்கு அங்குள்ள பக்தர்களும் வரவேற்றனர்.
இந்த நிலையில், மூலவர் சன்னதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், தாயார் சன்னதியில் தாயாரை மனம் உருக வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் நிர்வாகம் சார்பில், பள்ளிகொண்ட ரங்கநாதரின் திருவுருவப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து ஸ்ரீரங்கம் கோவிலில், ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார். இதனைப் பார்த்த பக்தர்கள், ஆளுநரின் ஆன்மீக தொண்டை மிகவும் மெய்சிலிர்த்து போனார்கள்.