கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!
Aug 20, 2025, 11:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நிலக்கரி தொழிலதிபர் முகமது ஏசர் அன்சாரி. இவர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்பட்ட நிலக்கரியை, வெளிச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இம்முறைகேடு தொடர்பாக ஏசர் அன்சாரியிடம் டிரக் டிரைவராகப் பணிபுரியும் சையத் சல்மானி உள்ளிட்டோர் மீது ஜார்க்கண்ட் மாநில போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான குற்றப்பத்திரிகையையும் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் 19 டன் எடையுள்ள நிலக்கரியை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகவும், அந்த டிரக்குகளை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இதனடிப்படையில், நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில், மானிய விலை நிலக்கரியை விநியோகம் செய்ததாக ஏசர் அன்சாரி குறிப்பிட்டிருந்த 13 நிறுவனங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும், மேற்கண்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்றவகையில், ஏசர் அன்சாரி 71 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பண மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் ஏசர் அன்சாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும் ஏசர் அன்சாரி அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி ஏசர் அன்சாரிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, மறுநாள் ஏசர் அன்சாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: Bussiness ManArrestEnforcement DirectorateJharkhand
ShareTweetSendShare
Previous Post

ஹனுமான் படத்தின் நடிகரை பாராட்டினார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

Next Post

தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies