அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆகவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக புதிதாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிரான் பிரதிஷ்டை விழாக்கள் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கின்றன.
இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. எனினும், பிரான் பிரதிஷ்டைக்கான முன்னேற்பாடு பூஜைகள் கடந்த 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கின்றன.
அதேசமயம். கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மேற்பார்வையில் அயோத்தியில் பிரான் பிரதிஷ்டைக்கு முந்தைய சடங்குகள் ஜனவரி 21-ம் தேதி வரை தொடரும். ஆகவே, நாளை முதல் 22-ம் தேதி வரை கோவில் மூடப்பட்டிருக்கும். எனவே, பக்தர்கள் தரிசனம் மூடப்பட்டிருக்கும்.
இதனால், இராம் லல்லாவை தரிசனம் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இராம் லல்லாவை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள பக்தர்கள், அயோத்தியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றன.
பக்தர்கள் தங்குவதற்கும், உணவு மற்றும் பயணம் செய்வதற்குமான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இதனிடையே, தேவ பிரபோதன், ஔஷத அதிவாஸ், க்ரிதா அதிவாஸ், குண்ட பூஜன் மற்றும் அக்னி குண்ட ஸ்தாபனத்தை உள்ளடக்கிய பல பிரான் பிரதிஷ்டை சடங்குகள் இன்று நடத்தப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க, பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி சென்றார். அங்கு, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் பிரான் பிரதிஷ்டைக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.