சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு இவரது வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த பட்டியலினைச் சேர்ந்த சிறுமி வேலை செய்து வந்துள்ளார்.
அந்த சிறுமியை மேற்படிப்பு படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் சென்னை அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆன்டோவின் மனைவி மெர்லின், அந்தச் சிறுமியை துன்புறுத்தி உள்ளார்.
சிறுமியை நிர்வாணப்படுத்துவது, உடலில் சூடு போடுவது, கரண்டியால் மார்பில் அடிப்பது, காயங்கள் ஏற்படுத்துவது, சாதி ரீதியாக இழிவாகப் பேசுவது, என மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்துள்ளார். அவ்வப்போது ஆண்டோவும் அந்த சிறுமியை தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, அந்த பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அவரது மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோருக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் ஆகியோர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரம் திமுகச் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அவரது மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் உள்ளிட்டோர் மீது நீலாங்கரை மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை பல்லாவரம் திமுகச் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, அவரது மகன் ஆன்டோ மதிவாணன், மருமகள் மெர்லின் உள்ளிட்டோர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.