அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது.
காங்கிரஸ் தலைவரிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர் விவேக் சம்பானேர்கர் என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலையுடன் சங்கத்தை தொடர்புபடுத்தி ஆர்.எஸ்.எஸ்.காரர் தொடுத்த சிவில் அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்வதில் காந்தியின் தரப்பில் 881 நாட்கள் தாமதம் ஏற்பட்டது, மேலும் அவரது வழக்கறிஞர் நாராயண் ஐயர் தாமதத்திற்கு மன்னிப்பு கோரி விண்ணப்பம் செய்தார்.
இந்நிலையில் எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று 500 ரூபாய் அபராதம் விதித்து தானே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.