1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!
Jul 23, 2025, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள்  எங்களை மறக்க மாட்டார்கள்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ராமர் கோவில் திறப்பை தேசமே தீபாவளி போல் கொண்டாடுகிறது. காலசக்கரத்தில் இன்றைய நாள் ஒரு பொற்காலம். கூடாரத்தில் இருந்த ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது.அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளோம்.

ராமர் கோவிலுக்காக பாடுபட்ட கரசேவர்களுக்கு நன்றி. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. ராமன் அரிச்சல்முனை சென்ற போது காலசக்கரம் மாறியது. நானும் அங்கு சென்ற போது அதனை உணர்ந்தேன்.இன்று ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பல நூற்றாண்டுகளாக இந்த பணியை செய்ய முடியாமல் போனதற்கு, நமது முயற்சி, தியாகம், தவத்தில் ஏதோ குறை இருக்க வேண்டும். இன்று பணி நிறைவடைந்துள்ளது. இன்றைக்கு பகவான் ஸ்ரீராமர் நம்மை மன்னிப்பார் என்று நான் நம்புகிறேன்

ராமர் கோவில் தொடர்பான சட்டப்போராட்டம் பல ஆண்டுகளாக நீடித்தது.  நீதி வழங்கிய இந்திய நீதித்துறைக்கு நன்றி. யாரையும் வீழ்த்தி இந்த வெற்றி கிடைக்கவில்லை. அந்த காலகட்டத்தில், பிரிவினை 14 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த காலத்தில், அயோத்தி மற்றும் நாட்டு மக்கள் பல நூறு ஆண்டுகால பிரிவினையை அனுபவித்து வருகின்றனர். நமது தலைமுறையினர் பலர் இந்த பிரிவினையை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் பிரபு ராமரின் பக்தர்கள் முழுமையாக  உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் உள்ளது. நாடு மற்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் இதை ஆழ்ந்து உணர்கிறார்கள்.இந்த தருணம் தெய்வீகமானது, இந்த தருணம் எல்லாவற்றையும் விட புனிதமானது.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை  மறக்க மாட்டார்கள்.  ராமர் புகழ் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். ராமர் என்பது யாரையும எரிக்கும் ஆற்றல் கிடையாது. சக்தியை தரும் ஆற்றல். அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டுமல்ல இந்திய கலாச்சாரமும் நிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Modimodi speechRamar TempleAyothiayodhya ramar temple functionin ayodhyaPM
ShareTweetSendShare
Previous Post

சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் புதிதாக 5 கேலரிகள் திறப்பு!

Next Post

இந்தியாவில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies