குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Oct 25, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியா்கள் தலைமையில் 30 மாணவர்கள் வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள ஹர்னி ஏரிக்கு கடந்த 18-ம் தேதி சுற்றுலா சென்றனர். அங்கு, 34 பேரும் ஒரே படகில் பயணம் செய்து ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஏரியில் விழுந்து தத்தளித்தனர். இவர்களது கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், 18 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மீதி 12 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதையடுத்து, இந்த விபத்து தொடர்பாக குஜராத் காவல் துறையினர் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். இந்த சூழலில், மேற்கண்ட விபத்து தொடர்பான விவகாரத்தை குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுனிதா அகர்வால், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, “படகில் பயணித்த குழந்தைகளுக்கு உயிர் காக்கும் மிதவை ஆடைகள் கூட வழங்கப்படவில்லை. சிறிதும் பொறுப்பற்று இவ்வாறு பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஆகவே, ஜனவரி 29-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். அதற்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Tags: high courtGujratBoat accidentAsked action report
ShareTweetSendShare
Previous Post

பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Next Post

இந்தியா வந்தடைந்தார் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர்!

Related News

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies