பிரதமர் மோடி யூடியூப்பில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா அதிகம் பார்க்கப்பட்ட நேரடி ஒளிபரப்பாக, உலக அளவில் முதல் இடத்திற்க வந்துள்ளது.
அயோத்தியில் ஸ்ரீராமரின் பிரான் பிரதிஷ்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதனை, பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலையாக வழங்கப்பட்து. இந்த நேரலையை 10 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதனை பார்த்துள்ளனர்.
சந்திரயான் -3 ஏவுதல், FIFA உலகக் கோப்பை 2023 போட்டியின் நேரடி ஒளிபரப்பு, உள்ளிட்ட நேரடி ஒளிபரப்பின் முந்தைய அனைத்து சாதனைகளையும் இது முறியடித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வையும் இது முந்தியுள்ளது.
ஆகஸ்ட் 23, 2023 அன்று ‘சந்திராயன்-3’ தரையிறங்கலின் நேரடி ஒளிபரப்பு, உலகளவில் 8.09 மில்லியன் பார்வைகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து 2022 உலகக் கோப்பை காலிறுதி பிரேசில் vs குரோஷியா 6.14 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது இவை அனைத்தையும் முந்தி, பிரதமர் மோடி யூடியூப்பில் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை 10 மில்லியனுக்கும் அதிகமானோரின் பார்வைகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 23,750 வீடியோக்கள் மற்றும் 472 கோடி பார்வைகளுடன் 2.1 கோடி பேர் பின் தொடர்கின்றனர். இது உலகத் தலைவராக இந்தியப் பிரதமரை உருவாக்கி உள்ளது.