வெளிநாட்டு மருத்துவா்கள் தொழில்முறை நிமித்தமாக இந்தியாவில் சேவையாற்றுவதற்கான தற்காலிகமாக பதிவு உரிமத்தை பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் மருத்துவ படிப்புகளை படித்து வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டு மருத்துவர்கள் தொழில்முறை நிமித்தமாக இந்தியாவில் சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தற்காலிக பதிவு உரிமத்தை பெறுவது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு குடிமக்களாக உள்ள அந்த மருத்துவா்கள், இந்தியாவுக்கு உயா் மருத்துவப் படிப்பை பயில வருவதற்கும், மருத்துவ நுட்பங்களை பகிர வருவதற்கும், மருத்துவ சேவையாற்ற வருவதற்கும் தற்காலிக பதிவு அவசியம்.அதற்கான வழிகாட்டுதல்கள் தேசிய மருத்துவ ஆணைய இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.