அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இடம் இல்லாதது அபத்தமாக உள்ளதாக அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பட்டியல் எந்த ஒரு ஆப்பிரிக்க நாடும் இல்லாதது குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்திருந்தார்.பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்பிரிக்கா நிரந்தர உறுப்பினர் இல்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
செப்டம்பர் மாதம் நடக்க உள்ள ஐ.நா. உச்சி மாநாடானது, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களை பரிசீலிப்பது மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவை ஒரு “பழைய கிளப்” என்று தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அங்கு ஏற்கனவே உள்ள உறுப்பு நாடுகள் புதிய உறுப்பினர்களை அனுமதிப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இல்லை என்பது அபத்தமானது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள சக்தி உள்ள நாடுகள் அதனை விட விரும்பவில்லை என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.ஐ.நா அமைப்புகளை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.