ராமர் கோயில் கொண்டாட்டத்துக்கு எதிராக கல்வீச்சு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட விழாவை கர்நாடகாவில் இந்துக்கள் கொண்டாடினர். அப்போது பல்வேறு இடங்களில் கல்வீச்சு உள்ளிட்ட மோதல் சம்பவங்கள் நடைபெற்றன.கலபுர்கியில் ராமுத்சவ் சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தை போலீசார் தடுத்ததால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து அப்பகுதியில் 3 நாள்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெலகாவியின் மூன்று பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. கோட்டை சாலை, தர்பார் காலி மற்றும் தலைமை தபால் நிலையம் ஆகிய 3 இடங்களில் 21 ஆம் தேதி இரவு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதியிலும் 144 தடையுத்தரவு போடப்பட்டது.
இதேபோல் மும்பையில் உள்ள மீரா சாலையில் ராம் மந்திர் பிரான் பிரதிஷ்தாவைக் கொண்டாட ஊர்வலமாகச் சென்ற இந்துக்களை, பெரிய கும்பல் ஒன்று ஜனவரி 21ஆம் தேதி இரவு தாக்கியது.
அதேபோல் ஜனவரி 22 ஆம் தேதி பகலிலும் தாக்குதல் தொடர்ந்தது. இதனையடுத்து உள்ளூர் அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கையில் இறங்கினர். இதுதொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.