இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறரார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட கலைஞர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். திட்டத்தின் தன்னார்வலர்களை சந்தித்தார். மேலும், 25 நாடுகளைச் சேர்ந்த யூத் எக்ஸ்சேஞ்ச் திட்ட கேடட்கள் மற்றும் குடியரசு தின விழாவின் பழங்குடியின விருந்தினர்களையும் சந்தித்தார்.
தொடர்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று பெண் குழந்தைகளின் பங்களிப்பை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, “சமூகத்திலும், நாட்டிலும் மாற்றங்களை கொண்டு வரும் ஆற்றல் பெண்களிடம் உள்ளது. ஆகவே, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அமிர்த காலத்தின் போது இளைஞர்களின் ஆற்றல் நாட்டிற்கு புதிய திசையை வழங்கும். 2047-ம் ஆண்டுக்குள் நாடு வளர்ச்சி அடையும். இளைஞர்கள் மீது மிகப்பெரிய பொறுப்புகள் உள்ளன.
ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஜன் நாயக் தாக்கூரியின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு உத்வேகம். ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஜன் நாயக் கர்பூரி தாக்கூரின் வாழ்க்கையிலிருந்து இளைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.