கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட  வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அதாவது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக செல்ல மின்சார ரயில் வசதி இல்லை என்றும்,  அதேபோல் அதிக  எண்ணிக்கையில் மாநகர பேருந்துகள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெளியூர்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் அதே பேருந்து நிலையத்தில் உள்ள மாநகர பேருந்துக்கு செல்ல நீண்ட தூரம் நடக்க வேண்டி  இருப்பதாகவும் பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில்,  கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற  அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என்றும், இதனை மீறும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும்,  எனவே கோயம்பேட்டில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும்  என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்தனர்.

கோயம்பேட்டில் இருந்து இன்று ஆம்னி பேருந்துகளை  இயக்கக்கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வலியுறுத்தினர். அப்போது, அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில், “தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை தினங்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. நேற்று இரவு திடீரென அறிவிப்பு வெளியிட்டு, 30-ம் தேதிக்குள் கோயம்பேட்டை காலி செய்யும்படி கூறினார்கள்.

தற்போது திடீரென கோயம்பேட்டில் இருந்து இயக்கக்கூடாது என்று சொன்னால் என்ன செய்வது? 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் எப்படி திடீரென இடத்தை மாற்ற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: killampakkamomini bus ownersgovt busesChennaiTamil Naduprivate buskoyembedu
Share
Tweet
SendShare
Previous Post

கடவுளை நம்பாத தலைவர்களின் பெயர்களில் கூட ராமர் பெயர்: வெங்கையா நாயுடு!

Next Post

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது: பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies