மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார், மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, திடீரென நிறுத்தப்பட்டதால், அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பர்தமான் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டரில் கொல்கத்தா திரும்புவதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக காரில் அவர் கொல்கத்தா திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரே பயங்கர வேகத்தில் கார் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து மம்தா கார் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதனால் காருக்குள் இருந்த மம்தா நிலைதடுமாறி மோதியுள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு வாகனம் என் கார் மீது மோத முற்பட்டது, எனது ஓட்டுநர் பிரேக்கை அழுத்தாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன். திடீரென பிரேக் போட்டதால் டேஷ்போர்ட் தாக்கி கீழே விழுந்தேன். ஒரு சிறிய காயம். மக்களின் ஆசீர்வாதத்தால் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என கொல்கத்தா திரும்பிய மம்தா தெரிவித்துள்ளார்.