அயோத்திக்கு செல்ல வேண்டாம்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!
Jul 31, 2026, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு செல்ல வேண்டாம்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அமைச்சர்கள் அயோத்தி இராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், இராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை ஆகியவை கடந்த 22-ம் தேதி நடைபெற்றன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராமரை பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து, நேற்று முதல் இராமரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. முதல் நாளான நேற்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால், அயோத்தி நகரமே ஸ்தம்பித்திருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், “தற்போது அயோத்தி இராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆகவே, அமைச்சர்கள் யாரும் இப்போது அயோத்தி இராமர் கோவிலுக்குச் செல்ல வேண்டாம்.

ஏனெனில், மத்திய அமைச்சர்கள் செல்லும்போது பக்தர்களின் தரிசனம் தடைபடும். இது பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே, மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு இராமர் கோவிலுக்கு செல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiRam TempleAyodyaCabinet meetingAdvice ministers
ShareTweetSendShare
Previous Post

மேற்கு வங்க முதல்வர் மம்தா சென்ற கார் விபத்து! 

Next Post

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஆசையா?

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies