அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அதில், அயோத்தியில் புகழ்பெற்ற புதிய கோவிலில் ராமர் சிலையின் வரலாற்று சிறப்புமிக்க ‘பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு கழித்தோம். ராமர் கோயில் மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல. நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கும் சான்று.
இன்று நம் நாட்டின் அரசியலமைப்பு துவக்கத்தை கொண்டாடும் பொன்னான நாள். இந்தியாவில், ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தின் கருத்தை விட மிகவும் பழமையானது. அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டை ‘ஜனநாயகத்தின் தாய்” என்று அழைக்கிறோம்.