75-வது குடியரசு தினம் :தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌபதி முர்மு!
Sep 14, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

75-வது குடியரசு தினம் :தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Jan 26, 2024, 11:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் 75-வது குடியரசு  தினத்தை முன்னிட்டு டில்லியில் குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார்.

இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று(ஜன.,26) நாடு  முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், குடியரசு விழாவில் பங்கேற்க வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தங்கர், பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பிரதமர் நரேத்திர மோடி வரவேற்று அழைத்து சென்றார். பிறகு, ராணுவ தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து கர்த்வயா பாதையில் 21  குண்டுகள் முழங்க தேசியக்கொடியை குடியரசு தலைவர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,குடியரசு துணை  தலைவர்  ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

பின்னர் 112 பெண்கள், கொண்ட இசைக்குழுவினர்,  பெண்கள் சக்தியை  பறைசாற்றும்படி இசைக்கருவிகளை வாசித்தபடி அணிவகுத்து வந்தனர். பெண்கள் நாதஸ்வரம், செண்டை மேளம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி வந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

Tags: National War MemorialPM ModiNational FlagRepublic dayPresident Drabupati MurmuFrench President Emmanuel Macron
Share
Tweet
SendShare
Previous Post

அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது – திரௌபதி முர்மு

Next Post

ஜனவரி 26 குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணி !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies