குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிப்பது போன்றது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கான விருதுக்குத்தான் அவர் சரியான நபராக இருந்திருப்பார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளத்தில், திமுக, அரசு, ஒவ்வொரு வாரமும், புதிய வீழ்ச்சியை எட்டுவதில் தவறவில்லை. குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதிக்கத்தக்ததாகும். சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கான விருதுக்குத்தான் அவர் சரியான நபராக இருந்திருப்பார்.
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை சிலிண்டர் குண்டுவெடிப்பு என்று அவர்கள் தொடர்ந்து அழைத்த திமுகவினர், இந்த தேர்வு நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. உண்மையைச் சரிபார்ப்பவர்கள் என்ற போர்வையில் அரைகுறை உண்மையை பரப்புவர்கள் அவர்கள். மக்களின் வரிப்பணம் வீணாகிறது, ஆனால் திமுக அரசுக்கு அதுகுறித்து என்ன கவலை?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பத்திரிகையாளரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The DMK Govt doesn't fail to hit a new low every alternative week. The Social Harmony Award to a Biased Manipulator on Republic Day is an insult to all recipients of this award in the past. Creating Social Disharmony would be the right category to place this person.
DMK’s…
— K.Annamalai (@annamalai_k) January 26, 2024