இந்திய குடியரசு தினம்: உலகத் தலைவர்கள் வாழ்த்து!
Jul 31, 2026, 01:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய குடியரசு தினம்: உலகத் தலைவர்கள் வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள இந்திய தூதரகம், இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த சூழலில், இந்திய குடியரசு தின விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள்  வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “இந்திய குடியரசு தின விழாவுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவின் முக்கிய மூலோபாய பங்காளியாக இந்தியா விளங்குகிறது. பல முக்கியத் துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

அதேபோல, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், “நாடு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் மிகவும் பிரகாசமான அமிர்த காலமாக இருக்கட்டும். பாரதம் வாழ்க, ரஷ்யா-பாரத உறவு வாழ்க” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. தவிர, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள இந்திய தூதரகம், இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்தக் கண்காட்சி நேற்று தாஷ்கண்டில் உள்ள அலிஷர் நவோய் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியின்போது, ​​உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதர் மணீஷ் பிரபாத், உஸ்பெக் மொழியில் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை வழங்கினார்.

Tags: 75th Republic DayMany foreign countrieswishes India
ShareTweetSendShare
Previous Post

சமூக நல்லிணக்க விருது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

நம் ஜனநாயகத்தின் அடித்தளம் வாக்காளர்கள் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies