இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் நல்லக்கம் செய்தபோது பவதாரணி தேசிய விருது வென்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு ‘ என்ற பாடலை பாடி நல்லக்கம் செய்தனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, கொழும்பில் இருந்து அவரது உடல் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது உடல், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர், பவதாரிணியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பவதாரிணி குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்த போது… ‘பாரதி’ படத்தில் அவர் பாடிய தேசிய விருது பாடலான, ‘மயில் போல பொண்ணு ஒன்னு… குயில் போல பாட்டு ஒன்னு என்கிற பாடலை பாடி, பவதாரணியின் இறுதிச் சடங்கை நிறைவு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.