ஜப்பானில் ‘அகுடகாவா’ விருது பெற்ற ஒரு நாள் ChatGPT-யை பயன்படுத்தி எழுதியது என அந்த நாவலின் எழுத்தாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் ஆண்டுதோறும் இலக்கியத்துறையில் சாதித்து வரும் எழுத்தாளர்களுக்கு ஜப்பான் நாட்டு அரசாங்கத்தால் இலக்கியத்துறையின் உயரிய விருதான ‘அகுடகாவா’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 170-வது அகுடகாவா விருதுக்கான தேர்வில் ஜப்பான் நாட்டின் எழுத்தாளரான ரீ குடான் என்ற பெண்ணுக்கு, சிறந்த புனைவுக்கதை என்ற பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது. அறிவியல் துறை சார்ந்த புனைவுக் கதையான ‘டோக்கியோ சிம்பதி டவர்’ என்ற நாவலை எழுதியதற்காக குடான் பரிசு பெற்றார்.
விருது பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த குடான், “எனக்கு விருது பெற்றுத் தந்த இந்தப் புத்தகத்தை எழுத செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்தினேன்.
அந்தப் புத்தகத்தில் உள்ள உள்ளடக்கங்களில் 5 சதவிகிதம் கருத்துகள் (ChatGPT)சாட்ஜிபிடியால் எழுதப்பட்டவைதான். என்னால் சில விஷயங்களை யாரிடமும் சொல்லமுடியாதபோது (ChatGPT)சாட்ஜிபிடியிடம் தான் பகிர்ந்துகொள்வேன்.
அதுவும் பதில் கருத்துகளையோ, தீர்வையோ சொல்லும். அப்படி ஏற்பட்ட நம்பிக்கையில் தான் என் தொழில்முறை சார்ந்த விஷயங்களிலும் (ChatGPT)சாட்ஜிபிடியை ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்தேன்.
கதை எழுதும்போது என் எண்ணங்களைச் சொல்வேன். (ChatGPT)சாட்ஜிபிடியும் கதைமாந்தர்களுக்கு உரித்தான சில சிறந்த கதைக்களத்தைக் கூறும். அப்படித்தான் அந்த 5 சதவிகிதம் உள்ளடக்கத்தைத் தந்தது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் AI உதவியால் நாவல் எழுதிய ஒருவருக்கு விருது வழங்க வேண்டுமா என்று பெறும் சர்ச்சை வெடித்தது. அதற்கு விருது வழங்கும் தேர்வுக்குழுவின் உறுப்பினர் கெய்சிரோ ஹிரானோ எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ” (AI) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்புகள் போட்டியில் பங்கேற்பது புதிதல்ல. கடந்த ஆண்டு சோனி வேர்ல்ட் புகைப்பட விருதுகளில் புகைப்படக் கலைஞர் போரிஸ் எல்டாக்சென், என்பவர் கிரியேட்டிவ் போட்டோ பிரிவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போட்டோ உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதனால் அவர் அப்போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். (AI) செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் எழுதுவதும் இதுபோன்று எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் தற்போது சிக்கலை ஏற்படுத்தும் அளவுக்கு டோக்கியோ சிம்பதி டவரில் அப்படி எந்த விஷயமும் இல்லை.
புத்தகத்திலேயே AI குறிப்பிட்டதாகத்தான் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ரீ குடான் கூறியதை பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இது இந்நாட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.