சக்ஷம் வடதமிழ்நாடு மாற்று திறனாளிகளுக்கான தேசிய இயக்கத்தின் 5-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது.
வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தூய்மை பணியாளர் ஆணைய தேசிய தலைவர் ம. வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற பூஜ்ய சுவாமி ஸத்யக் ஞானாந்தா மகராஜ் ஆசியுரை வழங்கினார்.
சக்ஷம் மாற்று திறனாளிகளுக்கான தேசிய தலைவர் முனைவர் S கோவிந்தராஜ் சிறப்புரை ஆற்றினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் எம். ஜெயச்சந்திரன், சக்ஷம் மாநில தலைவர் P சபாஷ்ராஜ், செயலாளர் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் முழுமையான மறுவாழ்வு அல்லது ஒருங்கிணைந்த மறுவாழ்வு அளிக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் உரிய வாய்ப்புகளை பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 3 சக்கர வண்டிகள், காது கேளாதோருக்கான கருவி உள்ளிட்டவை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன.