பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி, இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மாலையில் பாஜக ஆதாரவுடன் 9-வது முறையாக பிஹார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் பிஹார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டா நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
बिहार में बनी एनडीए सरकार राज्य के विकास और यहां के लोगों की आकांक्षाओं को पूरा करने के लिए कोई कोर-कसर नहीं छोड़ेगी। @NitishKumar जी को मुख्यमंत्री और सम्राट चौधरी जी एवं विजय सिन्हा जी को उप मुख्यमंत्री पद की शपथ लेने पर मेरी बहुत-बहुत बधाई।
मुझे विश्वास है कि यह टीम पूरे…
— Narendra Modi (@narendramodi) January 28, 2024
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“பீகாரில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், அதன் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் சாத்தியமான எல்லா உதவிகளும் செய்யப்படும்.
“முதலமைச்சராகப் பதவியேற்ற நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்களாகப் பதவி ஏற்றுள்ள சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இந்த குழு முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் மாநிலத்தின் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.