தமிழக பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டம் தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்குகிறது.நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை தொடங்குகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.தொடர்ந்து, 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும் 21-ம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது.