மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அபபோது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு வரலாறு காணாத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.இந்திய ரயில்வேக்கு 2024-25 நிதியாண்டில் மொத்தம் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு 6,331 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கேரளாவுக்கு ரூ,2,744 கோடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.2,681 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ரயில்வே பாதையை மின்மயமாக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. மாநிலத்தில் ரயில்வே வளர்ச்சி பணிகளுக்காக ரூ.2,861 கோடி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய ரயில்வே என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்து ஊடகம் மற்றும் நமது பொருளாதாரத்தின் முக்கியமான கட்டமைப்பாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது, மேலும் திறன் மேம்பாட்டுக்கான முதலீடு வழங்கப்படவில்லை. பிரதமர் மோடி இந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் கவனம் செலுத்தினார். 26,000 கிமீ புதிய பாதைகள் சேர்க்கப்பட்டன.
2024ல் மேலும் 5500 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்படும் என்று கூறிய அஷ்வனி வைஷ்ணவ், “கடந்த ஆண்டு மட்டும் 5000 கி.மீ புதிய பாதைகள் அமைக்கப்பட்டன. திறனை அதிகரிக்காமல், புதிய ரயில்கள் எப்படி ஓடும்? இதை பிரதமர் மோடி புரிந்து கொண்டார்.
இடைக்கால பட்ஜெட்டில், மூன்று முக்கிய பொருளாதார ரயில்வே வழித்தட திட்டங்களை அறிவித்தது குறித்து, ரயில்வே அமைச்சர், வழிச்சாலை அடிப்படையிலான வளர்ச்சி முக்கியமானது. இந்த முடிவின் மூலம் 40,000 கி.மீ. புதிய பாதை அமைக்கப்படும். இது ஜெர்மனியின் முழு நெட்வொர்க்குக்கும் சமம் என்றார்.