நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் இந்துக்கள் பூஜை நடத்த அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் (வியாஸ் கா தெகானா) இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து அங்கு நேற்று பூஜை தொடங்கியது.
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முஸ்லீம் தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து ஞானவாபி மசூதி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
தோடா, வியாஸ்-ஜியின் பாதாள அறை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 31 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்த மகிழ்ச்சியான தருணம் வந்துள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது வரை விஸ்வநாதரின் பூசாரிகள் மட்டுமே கோவிலில் (சர்ச்சைக்குரிய பகுதியில்) வழிபடலாம். ஆனால் தற்போது புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன என இந்துக்கள் தரப்பு மனுதாரரான சோகன் லால் ஆர்யா தெரிவித்துள்ளார்.