அசாமில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ. 11,599 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
காமாக்யா கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், 38 பாலங்கள் உட்பட 43 சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
டோலாபரி முதல் ஜமுகுரி வரை மற்றும் பிஸ்வநாத் சாரியாலி முதல் கோபூர் வரை ஆகிய இரு நான்கு வழித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டங்கள் இட்டா நகருக்கான இணைப்பை மேம்படுத்தவும், பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும்.
மாநிலத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்கிறார். சந்திராபூரில் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் மற்றும் நேரு ஸ்டேடியத்தை கால்பந்து மைதானமாக மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.