தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.42 அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 199 கன அடியிலிருந்து, 107 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 70.42 அடியாக உள்ளது.
அணையில் தற்போது 33.06 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. இன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட, அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.