இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இரட்டை சதம் அடித்து இந்திய இளம் வீரர் சாதனை!
Jul 29, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இரட்டை சதம் அடித்து இந்திய இளம் வீரர் சாதனை!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 336 ரன்களை எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் போட்டி தொடங்கியுள்ளது.  தொடக்கத்திலேயே இந்திய அணியில் தொடக்க வீரர்க களமிறங்கிய ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.

நேற்றையப் போட்டி முடிவில் 179 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ஜெய்ஸ்வால் இன்று இரட்டை சதம் எடுத்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது சோயப் பஷீருக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு அடுத்த பந்திலேயே பண்டரியையும் விளாசி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடித்தார்.

குறிப்பாக முதல் நாளிலேயே 94 ரன்களில் இருந்த போது டாம் ஹார்ட்லிக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு சதமடித்த அவர் தற்போது 191 ரன்களில் இருந்த போது பவுண்டரியை விளாசி இரட்டை சதமடித்துள்ளார்.

ஜாம்பவான் வீரேந்திர சேவாக் போல கொஞ்சமும் தயக்கமும் பயமும் இல்லாமல் சதத்தையும் இரட்டை சதத்தையும் ஒரே போட்டியில் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இப்போட்டியில் இதுவரை 19 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடித்துள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரு இன்னிங்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்சர்கள் கூட அடித்ததில்லை.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சவால் விடும் வகையில் ஜெயிஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுத்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் கேட்ச் பிடிக்க ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

Tags: IndiaenglandYashasviYashasvi JaiswalIndvsEng test200 runs
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிரபல டென்னிஸ் வீரர்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies