சென்னையில் உள்ள பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட்.
இந்த நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகளை விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது.
கடந்த வருடம் மட்டும் 1,100 கோடி ரூபாய்க்கு மேல் அந்த நிறுவனம் வருமானத்தை ஈட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்தை 500 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் முற்றுகையிட்டனர். தாழம்பூர் காசா பிரம்மாண்டம் ஸ்மார்ட் நகரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிறுவனம் திமுகவில் உள்ள முக்கிய புள்ளிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. மேலும், இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.