அசாம் மாநிலத்தில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரூ.₹498 கோடி மதிப்பில் காமாக்யா கோவில் நடைபாதை , ₹358 கோடி செலவில் கவுகாத்தி புதிய விமான நிலைய முனையத்திலிருந்து ஆறு வழிச்சாலை, ₹498 கோடி மதிப்பில் நேரு ஸ்டேடியத்தை ஃபிஃபா தரத்திற்கு மேம்படுத்துதல், ரூ.300 செலவில் சந்திராபூரில் புதிய விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்காக கவுகாத்தி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த ஜீப்பில் அழைத்து செல்லப்பட்ட பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.