மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும், பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் ETG சர்வே இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) பெரும்பான்மை பெறும் என்று 91 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அந்த கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என 45 சதவீதம் பேரும், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என பலர் தெரிவித்துள்ளனர்.
3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார் என சுமார் 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அண்மையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல், குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக அசுர பலத்துடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.