ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் நடந்துவருகிறது.
ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, QR குறியீடு மோசடி, ஹேக்கர்கள் தொல்லை எனப் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன.
அதிலும் இப்போது ஹேக்கர்கள் தொல்லை அதிகரித்துவிட்டதால் மொபைல் யூசர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதேபோல் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
அவர்கள் சொல்லும் அப்டேட்டுகளை உடனுக்குடன் செய்ய வேண்டும். இல்லையென்றால் மொபைல் யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் எல்லாம் இணையத்தில் வெளியிடப்படும்.
ஹேக்கர்கள் கையில் சிக்கி பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில் ஆப்பிள் மொபைல் யூசர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எச்சரிக்கை வந்திருக்கிறது.
அதன்படி மத்திய அரசு CIAD-2024-0007 என்ற எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் iPhone மற்றும் Mac பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படலாம் என்றும், இதனால் வங்கி கணக்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, iPhone மற்றும் Mac பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கொடுத்திருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.