சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்! - குடியரசுத் தலைவர்
Sep 12, 2026, 03:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட காமன்வெல்த், ஒத்துழைப்பு உணர்வுடன் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி காட்ட முடியும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

ஸ்ரபுதுதில்லியில் நேற்று (2024 பிப்ரவரி 4,) நடைபெற்ற காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்க (CLEA) – காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மாநாடு (CASGC)-2024-ன் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,

சரியானது மற்றும் நியாயமான கருத்துகள் தர்க்க ரீதியாக வலுவானதாக இருக்கும் என்று கூறினார். இந்த மூன்று பண்புகளும் இணைந்து ஒரு சமூகத்தின் ஒழுங்கை வரையறுக்கின்றன என்று தெரிவித்தார்.

அதனால்தான் சட்டத் தொழில் மற்றும் நீதித்துறைப் பிரதிநிதிகள்தான் இதை நிலைநிறுத்த உதவுகிறார்கள் என்று தெரிவித்தார். இவை  சவாலுக்கு உட்படுத்தப்பட்டால், வழக்கறிஞர்களாகவோ, நீதிபதிகளாகவோ, சட்ட மாணவர்களாகவோ, ஆசிரியர்களாகவோ அவர்கள் அதைச் சரி செய்ய மிகவும் முயற்சி செய்கிறார்கள் என்று கூறினார்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை “சமூக, பொருளாதார, அரசியல் நீதி” பற்றி பேசுகிறது என்று கூறினார். எனவே, ‘நீதி வழங்கல்’ பற்றி நாம் பேசும்போது, சமூக நீதி உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சமீப காலங்களில், உலகம் பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், நீதி என்ற கருத்தில் இந்த மாறுபட்ட அம்சங்களுடன் சுற்றுச்சூழல் நீதியையும் நாம் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

சுற்றுச்சூழல் நீதியின் பிரச்சினைகள் பெரும்பாலும் எல்லை தாண்டிய சவால்களை முன்வைக்கின்றன என்று தெரிவித்தார். ‘நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்’ என்ற இந்த மாநாட்டின் முக்கிய பகுதியாக அவை அமைகின்றன என்று குறிப்பிட்டார்.

எல்லைகளைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளை காட்டும் ஒரு பொதுவான பாதையை உருவாக்கும் பொறுப்பை காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கம் (CLEA) ஏற்றுக்கொண்டிருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

‘நீதிக்கான அணுகல்- இடைவெளிகளை நிவர்த்தி செய்தல்’ என்பது மாநாட்டின் துணைக் கருப்பொருள்களில் ஒன்று என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், பல்வேறு பிரதிநிதிகள், வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களின் பங்கேற்பின் மூலம் மாநாட்டின் கலந்துரையாடல்கள் பயனுள்ள விளைவுகளை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உலகளாவிய விவாதங்களில் இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்லாமல் பழமையான ஜனநாயக நாடு என்பதையும் வரலாறு காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த வளமான மற்றும் நீண்ட ஜனநாயக பாரம்பரியத்துடன், நவீன காலத்தில் நீதி வழங்குவதில் இந்தியா தமது அனுபவங்களை உலகுக்கு வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

Tags: President Draupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

ஐ போன் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Next Post

ஜார்கண்டில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : தப்புமா சம்பாய் சோரன் அரசு?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies