திமுக சாராய வியாபாரத்தில் மட்டுமே அக்கரையாக செயல்பட்டது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
ஊடகங்களையும் பத்திரிக்கைகளையும் பணம் கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டு, உண்மையை நசுக்கி அழித்து, பொய்களை மட்டும் கட்டவிழ்த்து விட்டு, தங்களை தாங்களே ”இந்திரன்” ”சந்திரன்” என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி சம்பாதிப்பதுதான் திமுகவின் தொழில்!
இப்போது ”சமூகஊடகம்” என ஒன்று வந்துவிட்டதால், அதில் லட்சக்கணக்கில் செய்தியாளர்கள் செயல்படுவதால், திமுகவால் ஊடக மோசடி வேலையை செய்ய முடியவில்லை! எனவே இப்போது ஆங்காங்கு திமுகவுக்கு எதிராக உண்மை வெடிக்கத்துவங்கியுள்ளது! இப்போதெல்லாம் திமுகவால் உண்மையை பெரிதாக நசுக்க முடியவில்லை!
511 தேர்தல் வாக்குறுதிகளை திமுக 2021 தேர்தலில் தந்தது! அதில் 20 வாக்குறுதிகளை மட்டும் அரை குறையாக திமுக நிறைவேற்றியது! மீதம் 491 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் கிடக்கிறது! தமிழகம் முழுமையும் நானூறுக்கும் அதிகமான பிரச்சனைகள் வெடித்து சிதறியவண்னமாக உள்ளது!
அதில் ஒன்றுதான் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்! 311 வது வாக்குறுதியாக ”சம வேலைக்கு சம ஊதியம் தருவோம்” என ஒரு வாக்குறுதியை இடை நிலை ஆசிரியர்களுக்கு திமுக தந்து அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்தது! ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உடன் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டது திமுக!
2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தது! அப்போது 1-6-2009 ம் வருடம் ஜூன் மாதம் முதல் தேதி திமுக அரசு ஒரு கோமாளி கூத்து ஆடியது! ஒரே வேலை ஒரே தகுதி! ஆனால் 1-6-2009 ம் தேதியும் அதற்கு பின்பு பணி நிரந்தரம் செய்யப்படுவோருக்கு ரூ.5200 ஊதியம் எனவும் 1-6-2009 க்கு ஒருநாள் முன்னர் நியமணம் ஆனோருக்கு ஊதியம் ரூ.8370 எனவும் நிர்ணயம் செய்து கோமாளி அறிவிப்பை வெளியிட்டது! இதனால் ஒரு நாள் வித்தியாசத்தில் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டார்கள்!
20,000 இடைநிலை ஆசிரியர்களும் போராட்டம் நடத்தினர்! திமுகவினர் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினர்! பெரும்பாலான ஆசிரியர்கள் தாய்மார்கள் என்றும் பாராமல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது திமுக!
2011 ல் அதிமுக ஆட்சி வந்தது! அவர்கள் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்! திமுக ஆட்சியின்போது இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரித்த அதிமுக, தங்களின் அதிகாரத்தின்போது ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தரவில்லை! இருவேறு சம்பளங்களை அறிவித்தது திமுக! வேலையில் அமர்த்தியது திமுக! இவர்களெல்லாம் திமுகவின் ஆதரவாளர்கள்! என்னும் கருத்தினை மனதில் வைத்துக்கொண்ட அதிமுக, ஆசிரியர்களுக்கு நியாயம் வழங்க முன்வரவில்லை!
2021 தேர்தல் வாக்குறுதியில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்பதாகவும், ஒரே ஊதியம் என வழங்குவோம் எனவும், ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என, தங்களின் தேர்தல் அறிக்கை 311 வது வாக்குறுதியில் அறிவித்தது திமுக! மகிழ்ச்சியடைந்த இடைநிலை ஆசிரியர்கள், மீண்டும் திமுகவை ஆதரித்து வாக்களித்தனர்!
ஆட்சிக்குவந்தார் மு.க.ஸ்டாலின்! எங்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என கேட்டனர், இடை நிலை ஆசிரியர்கள்! “சரியாக ஏமாற்றிட்டோமில்ல” என்னும் விதத்தில் கொக்கரித்தது திமுக! ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்! திமுக அரசு இரும்பு கரம் கொண்டு ஆசிரியர்களை அடக்கியது! தங்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட ஒரு சிறு முயர்ச்சியையும் திமுக செய்யவில்லை! திமுக சாராய வியாபாரத்தில் மட்டுமே அக்கரையாக செயல்பட்டது!
14 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது! இன்னிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் வாக்குறுதியை தயாரிக்கும் பணியை திமுக செய்ய துவங்கிய நிலையில், மீண்டும் மீண்டும் பொய்யா? மக்களை முட்டாளாக்குவதா? என சீறி எழுந்த ஆசிரியர்கள் திமுக அரசுக்கு கடிதங்களையும் வாட்ஸ்-அப் களையும் அனுப்பி வருகின்றனர்!
”முதலில் தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்றி சொன்னதை செய்யுங்கள்” என்பதுதான், ஆசிரியர்கள் இந்த அரசுக்கு அனுப்பி வைக்கும் எச்சரிக்கை கடிதமாகும்!
இதற்கிடையில் பணிமூப்பு ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் இறங்கியுள்ளது! பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக 2021 தேர்தல் வாக்குறுதியில் வாக்குறுதி கொடுத்தீர்களே, அந்த வாக்குறுதியை 3 வருடங்கள் ஆட்சி செய்த பின்பும் நிறை வேற்றவில்லையே! ஏன் இந்த பாராமுகம் என்று கொதித்து எழும் பணிமூப்பு ஆசிரியர்கள்! பிப்ரவரி 2024 முதல் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் போராட்டம் நடத்த போவதாக அரிவித்துள்ளனர்!
இந்த வகையில் தமிழகம் முழுமையும் விவசாயிகள், தொழிலாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என நூற்றுக்கணக்கான போராட்டங்கள், திமுக அரசுக்கு எதிராக வெடித்தவன்னமாக உள்ளது!
விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலையை கூட்டி தருவதாக சொன்னார்கள் செய்யவில்லை! விவசாய பல்கலைக்கழகம் அமைப்பதாக சொன்னார்கள் செய்யவில்லை! நாளைமுதல் குடிக்கமாட்டேன் என குடிகாரன் வாக்குருதி தந்ததுபோல் மதுக்கடைகளை மூடுவோம், திமுக நடத்தும் மது ஆலைகளை மூடுவோம் என வாக்குருதி தந்தார்கள் ஆனால் சாராய வியாபாரத்தை அதிகரிக்கும் வேலையை செய்கிறார்களேயன்றி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை!
234 தொகுதிகளிலும் நடை பயணம் மேற்கொண்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினார்களோ அதையெல்லாம் சுட்டிக்காட்டி திமுக அரசு எதையுமே செய்யவில்லையென முழங்கி வருகிறார் பாஜகவின் மாநில தலைவர் மக்கள் தலைவர் அன்னாமலை ஐ.பி.எஸ்!
மக்களெல்லாம் ஒன்றுகூடி வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர்! திமுகவுக்கு எதிராக குரல் எழுப்பும்பொதுமக்கள் மக்கள் தலைவர் அன்ணாமலை ஐ.பி.எஸ் அவர்களுக்கு ஆதரவினை தெரிவித்தும் குரல் எழுப்பி வருகின்றனர்!
தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாத திமுகவுக்கு எதிராக சீறி எழுந்து போராடும் பொதுமக்கள் அன்ணாமலையின் தலைமையை ஏற்று ஆர்ப்பரிப்பதை மக்கள்தலைவரின் நடைபயண பேரணியில் காண முடிகிறது!
மொத்தத்தில் திமுகவுக்கு எதிரான போராட்டமும் மக்கள் தலைவர் அண்னாமலைக்கு ஆதரவான ஆர்பரிப்பும் ஒரே நேரத்தில் தமிழகத்தில் நிகழுகிறது! இந்த மக்கள் ஆதரவு பாஜக பேரலையில் ஆசிரியர்களும் சங்கமித்துள்ளார்கள்! எனவே பாரதிய ஜனதா ஆட்சி தமிழகத்தில் அமையும்போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, ஆசியியர்கள் வனக்கத்திற்கு உரியவர்களாக பேணப்படுவார்கள் என்பது திண்ணம்!
சாராய வியாபாரிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து அவர்களிடம் நல்லாட்சியை எதிர்ப்பார்த்தது நமது குற்றம் என்பதை இப்போது பொதுமக்கள் உணரத்துவங்கியுள்ளனர்!
நல்லவர்களை படித்தவர்களை பன்பாளர்களை தேர்ந்தெடுத்தால்தான் நமக்கு நல்லது நடக்கும் என்பதை மக்கள் இப்போது புரிந்துக்கொண்டதாலேயே ஆசிரியர்கள் உட்பட அனைத்து மக்களும் மக்கள் தலைவர் அன்ணாமலையின் பின்னால் அணிதிரழுகிறார்கள் என்பதுதான் உண்மையாக உள்ளது! எனத் தெரிவித்துள்ளார்.